1999 ல் எச் எம் வி இசை நிறுவனம் ' லெஜென்ட்ஸ் ' என்ற தலைப்பில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசைத்தொகையொன்றை வெளியிட்டது . அதற்கு ஒரு தொலைக்காட்சி விளம்பரம் தயாரிக்கும் வேலை எனக்கு அளிக்கப்பட்டது . எம் எஸ் விஸ்வநாதனின் பேட்டித்துணுக்குகளும் அதில் இடம்பெற்றன . விஸ்வநாதனை நேரில் சந்திக்கும் அனுபவத்தைப்பற்றிய உள்ளக்கிளர்ச்சியுடன் நான் சென்னை சாந்தோம் ஹைரோடில் இருந்த அவரது இல்லத்துக்கு ஒளிப்பதிவுக்குழுவுடன் விரைந்தேன் . நிச்சயிக்கபப்ட்ட நேரத்துக்கு முன்பே அவர் படப்பிடிப்புக்குத் தயாராக இருந்தார் , வெள்ளையும் வெள்ளையும் உடையும் அவருடன் எபோதுமே இருக்கும் அந்த ஆர்மோணியமுமாக . மறக்கமுடியாத எத்தனையோ பாடல்களை உருவாக்கியவர் ... இந்தியாவின் இணையற்ற இசைமேதை ... என் கண்முன் ரத்தமும் சதையுமாக உட்கார்ந்திருந்தார் . அவர் எங்களை மிக எளிமையும் பணிவுகாக வரவேற்றார் . அடுத்த மூன்றுமணிநேரம் அவரிடமிருந்து தொடர்ச்சியாக தன் இசைவாழ்வின் நினைவுகள் பெருகிவந்தபடியே