ஆசையும் என் நேசமும் ரத்தப் பாசத்தினால் ஏங்குவதைப் பாராயடா ஆவலும் நிறைவேறிடும் என் ஆருயிரே நீயருகில் வாராயடா… குலேபகாவலி ( 1956) படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வெளியாகி பன்னிரண்டு ஆண்டுகள் கழித்துப் பிறந்தவன் நான். எனக்கு ஏறத்தாழ ஐந்து வயதிருந்த காலத்தில் ஏதோ ஒரு நாளில் வானொலியினூடாக ஜமுனா ராணியின் குரலில் முதன்முதலில் கேட்டதாக நினைவிருக்கும் பாடல் இது. கேட்டவுடனே அப்பாடல் என் மனதில் பதிந்துபோனதன் முதல் காரணம் , அப்பாடலின் பல்லவியில் ஒவ்வொரு வார்த்தையும் முடியும்போது வரும் ‘ஹிக்!’ எனும் விக்கல் சத்தம்தான். ஆனால் , எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த ஒருபோதும் மறக்க முடியாத அந்த மெட்டும் , அப்பாடலின் தொடக்க வரியில் எழுதியிருப்பது போல் ‘தாகமும் சோகமும் தாபமும்’ கலந்த அப்பாடகியின் கவர்ந்திழுக்கும் குரலும்தான் என்னை அப்பாடலோடு என்றைக்குமாக இணைத்தது என்பதைப் பிற்பாடு உணர்ந்துகொண்டேன். அன்றிலிருந்து இன்று வரை எனது ஆதர்சமான பாடகிகளில் ஒருவர் ஜமுனா ராணி. அந்தப் படத்தில் இருந்த பன்னிரண்டு பாடல்களில் இந்த ஒரேயொரு பாடல்தான் ஜமுனா ராணிக்கு. ஆனால் , மற்ற எல்லாப் பாடல்களை விடவும் கவனத்தை ஈர்த்தது ...
“ உயிருட னி ருக்கும் மனித ர்களை உள்ளங்கால் கீழில் மிதித்து நசுக்கி, இறந் துபோன வர்களை வழிபடும் உங்கள் நாகரீகத்தை, கலாச்சாரத்தை நான் வெறுக்கிறேன் , கண்டிக்கிறேன் ”. என்று சொன்னவர் குரு தத். ஆனால் தனது வாழ்நாளிலும் தான் இறந்த பிறகும் அந்தக் கலாச்சாரத்தையே சந்திக்க நேர்ந்தவர் அவர். தனது முப்பத்தொன்பதாவது வயதில் அவர் இறந்து போனபின் கிட்டத்தட்ட இரண்டு பதிற்றாண்டுகள் குரு தத் பற்றி ய பெரிய உரையாடல்களோ ஆய்வுகளோ விவாதங்களோ எதுவுமே இங்கே நிகழவில்லை. ஆனால் 1980 க ளிலிருந்து இந்தியாவிலும் உலகம் முழுவதும் ஒரு கதைக் காவிய நாயகனாகவே மாறி விட்டார் குரு தத். எட்டு படங்களை த்தான் இயக்கினார் என்றாலும் இன்று உலக சினிமா விலேயே மதிக்கப்படும் ஓர் இயக்குநர் அவர். பத்துக்கும் மேலான மொழிகளில் அவரைப் பற்றி குறைந்தது நானூறு புத்தகங்களாவது வெளிவந்திருக்கும் என நினைக்கிறேன். இருபதுக்கும் மேலான குரு தத் ஆவணப் படங்களை பார்த்திருக்கிறேன். அவற்றுக்குள் பதிவு செய்யப்படாத எதையுமே புதிதாக நாம் குரு தத் பற்றி இங்கே எழுதிவிட முடியாது. இருந்தும் அவரைப்பற்றி மீண்டும் உரையாடுகிறோம். காரணம் குரு தத்துக்கு நிகரான இன்னொரு ...