முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர் 19, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாடகனின் மறைவு

192 5 காலகட்டம். ஒலி வாங்கிகளோ ஒலி பெருக்கிகளோ ஒலிப்பதிவு தொழில்நுட்பங்களோ இல்லை. துல்லியமான கர்நாடக இசையில் ,  கமாஜ் ராகத்தில்   ’காமி சத்தியபாமா கதவைத்திறவாய்’   என்று உச்சஸ்தாயியில் பாடிக்கொண்டு மேடையில் நடிக்கிறார் எஸ். ஜி. கிட்டப்பா. அவர் ஒரு மரபிசைப் பாடகர். ஆழ்ந்த இசைஞானமும் ஆன்மா ததும்பும் பாடும்முறையும் கொண்டவர். ஆனால் தன்னை ஒரு நடிகராகத்தான் அவர் முன்வைக்கிறார்! இசைஞானமும் பாடும் திறனும் மேடையில் தோன்றி நடிப்பதற்கான அடிப்படைத்   தகுதி மட்டுமே அவருக்கு! நவீன தொழில்நுட்பத்தின் எந்தவொரு உதவியுமில்லாமல் இங்கு இயங்கிய கடைசிப்   பாடக நடிகர் அவர். ஒலித் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டக் குதிப்பான பேசும் திரைப்படங்களின் வருகைக்கு முன்னரே அவர் இறந்துபோனார். 1930களில் ஒலியுள்ள திரைப்படங்கள் வந்தபோதும் இசைஞானிகளான பாகவதர்கள்தாம் நடிகர்களாகத் தோன்றினார்கள். ஒவ்வொரு திரைப்படத்திலும் எண்ணற்ற பாடல்கள். முக்கால் பங்கு வசனங்களும் பாடல்களே! பி யூ சின்னப்பா பாகவதர் வந்தார் , எம் கே தியாகராஜ பாகவதர் வந்தார். பெயரில் பாகவதர் என்று இல்லை என்றாலும் சி எஸ் ஜெயராமனும் டி ஆர் மகாலிங்கமும் ஜி என் பாலசுப