முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட் 8, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இணையம் தழுவும் எழுத்து

இலைகள் மரப்பட்டை விலங்குத் தோல் பருத்தி இழை செயற்கை இழை.... தடித்த எழுத்துக்களில் வேறு வேறு வண்ணங்களில் எழுதி   மகளிடம் கொடுத்தேன். “இது போதுமா அப்பா ? ”   என்று சந்தேகமாகக் கேட்டாள். “அது இவ்வளவுதான்டா செல்லம்”   என்றேன். மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்த கீதிப் பாப்பாவின் முகம் வாடிப்போயிருந்தது! “என்னடா ஆச்சு ? ” “நேஹா , தியா , நித்தியா , மாதவ் , அசுவின்.. அல்லாரும்   நெறய   பேஜில கலர் போட்டோ அல்லாம் ஒட்டி வெச்சு எடுத்தினு வந்தாங்க. அவங்களுக்கல்லாம் மிஸ் அஞ்சு ஸ்டார் தந்தாங்க.. என்னோட புக்கப் பாருங்க!”.   நான் அவளது வீட்டுப்பாடப் புத்தகத்தை புரட்டிப் பார்த்தேன். நட்சத்திரங்கள் எதுவுமில்லை! மேலும் எல்லாமே தவறு என்பதுபோல் வெட்டியும் போட்டிருக்கிறார் வாத்தியாரம்மா!   மனிதன் அணியும் உடைகளின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி எழுதத்தானே கேட்டிருந்தார்! அடுத்தநாள் பள்ளிக்கு மகளை அழைத்து வரச் சென்றபோது என்ன நடந்தது என்று தெளிந்து விட்டது. வண்ணப்படங்களை ஒட்டி ,   விரிவான அட்டவணைகளைப் போல் தயாரித்த பல பக்கங்களில் மனித உடைகளின் வரலாற்றை விரிவாக விளக்கியிருந்தனர் பெரு

ரசனை என்பது யாதெனில்

அப்போது எனக்குப்   பதினைந்து வயதிருக்கும். எங்களுக்கு   அயல் வீட்டில் வசித்து வந்தவரின் பெயர் கருணாகரன். வயதைத்   தாண்டி பலகாலமான   பின்னர்தான் அவருக்குத்   திருமணம் நடந்தது. வினோதமான முகத்தோற்றம் கொண்ட ,  சதா சிடுமூஞ்சியான கருணாகரன் பேரழகியான ஓமனச் சேச்சியை திருமணம் செய்து கொண்டுவந்தார்!   ’ இது எப்படி நடந்தது ?  இந்த சேச்சிக்கு என்ன கண்பார்வை இல்லையா ? ’   என்றெல்லாம் ஆதங்கமடைந்து ஒருவருக்கொருவர் புலம்பிக்கொண்டனர் அங்குள்ள இளவட்டங்கள்.  நானும் அவர்களில் ஒருவன்.  திருமணமாகி ஒரு வாரம்கூடக்   கடக்காத நிலையில்   மனைவியை அடித்துத்   துவைக்க ஆரம்பித்தார் கருணையே இல்லாத கருணாகரன் ! தனது மனைவியை அவர் அடிப்பதன் காரணம் தாழ்வுணர்ச்சிதான் என்று அனைவரும்   நினைத்தனர். ஆனால் உண்மை அதுவல்ல என்பதை முதலில் கண்டுபிடித்தது நான்தான்! அவர்களது வீட்டிற்குச்   செல்லும்போதெல்லாம் அங்கு உணவு மேசைக்குக்   கீழ் வைத்திருந்த ஒரு பாறாங்கல்லைப்   பார்த்திருக்கிறேன். திருமணம் முடிந்து சில நாட்களிலேயே கருணாகரன் அக்கல்லை அங்கு கொண்டுவந்து வைத்தார். மனைவி சமைக்கும் உணவு வகைகளைக்   கொஞ்சம் சுவைத்துப் பார்த்தவுடன்