முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட் 8, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரித்விக் கட்டக்கின் காதலி

  ” திதாஷ்... கல்கத்தாவில் தானே இருக்கிறாய். அடிக்கடி சென்று ஷுரமாதி*யைப் பார்த்துக்கொள். தேவையான உதவிகளைச் செய். 93 வயதில் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் அவரது வீட்டுத் தொலைபேசியை யாருமே எடுப்பதில்லை. போனவாரம்கூட அழைத்திருந்தேன்” என்று அலைபேசியில் சொன்னேன். “ஐயோ சார்… உங்களுக்குத் தெரியாதா ? ஷுரமாதி இறந்துபோய் இரண்டு மாதம் ஆகிறதே” என்றாள் திதாஷ். தலையில் யாரோ ஓங்கி அறைந்ததுபோல் இருந்தது எனக்கு. அவள் சொன்னது ரித்விக் கட்டக்கின் மனைவி ஷுரமா கட்டக்கின் மரணம் குறித்து. பலநாட்களாக உடல்நலமற்று இருந்தார். வயதும் அதிகமாகியிருந்தது. ஆனால் ஒரு மகனைப்போல் என்னை நேசித்த ஷுரமாதியை இறுதியாக ஒருமுறை சென்று பார்க்க முடியவில்லையே! ஷுரமாதி இறந்த செய்தியை காலதாமதமாக எனக்கு வழங்கிய திதாஷ் 23 வயது மட்டுமேயான இளம்பெண். ரித்விக் கட்டக் நினைவு அறக்கட்டளை வழியாக எனக்கு அறிமுகமானவள். அவளது வித்தியாசமான பெயர் ரித்விக் கட்டக்கின் திரைப்படமான ‘திதாஷ் எக்தி நதிர் நாம்’ என்பதிலிருந்து எடுக்கப்பட்டது. திதாஷின் தாய் ரித்விக் கட்டக்கின் தீவிர ரசிகை. மகளுக்கு திதாஷ் என்றும் மகனுக்கு ரித்வ

பிரபஞ்சனும் நானும்

  “நமது புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பிரபஞ்சனையும் அழைப்போமே. உங்களது கட்டுரைகளை எல்லாம் படித்துப் பாராட்டி அடிக்கடி என்னிடம் பேசுவார்” என்று சொன்னார் பதிப்பாளர் கவிஞர் மனுஷ்யபுத்திரன். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. மானுடம் வெல்லும், வானம் வசப்படும், சில சிறுகதைகள் என ஓரளவுக்குப் பிரபஞ்சனை படித்திருக்கிறேன். அவரது எளிமையான மொழிநடையும் பாத்திரப் படைப்புகளும் எனக்குப் பிடித்தமானவை. ஆனால் அதுவரை நான் அவரைச் சந்தித்திருக்கவில்லை. அவர் ஒரு திரையிசைப் பிரியர், முற்போக்கு எண்ணங்கள்கொண்ட கறாரான நாத்திகர் என்பதையெல்லாம் கேள்விப்பட்டிருந்தேன். எனது ‘சொல்லில் அடங்காத இசை’ புத்தக வெளியீட்டு விழாவிற்கு அவரை அழைக்கச் சென்றேன். ஓர்   உணவுவிடுதியில்   நிகழ்ந்தது   அச்சந்திப்பு .  வடிவான   நீல   வண்ண   ஜிப்பா   அணிந்து   நறுமணங்களைப்   பூசி   குளிர்   கண்ணாடியை   வைத்து   மெலிந்து   உயர்ந்த   மனிதராக   பிரபஞ்சன்   காட்சியளித்தார் .  எண்ணற்ற   வெண்சுருட்டுகளைப்   புகைத்துத்   தள்ளிக்கொண்டு ,  பலகுவளை   ஃபில்டர்   காப்பிகளை   குடித்து   முடித்தவாறு   கிட்டத்தட்ட   மூன்று   மணிநேரம்   என்