முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட் 8, 2006 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் பாடும்போது

1999 ல்   எச்   எம்   வி   இசை   நிறுவனம்  ' லெஜென்ட்ஸ் '  என்ற   தலைப்பில்   விஸ்வநாதன்   ராமமூர்த்தியின்   இசைத்தொகையொன்றை வெளியிட்டது .  அதற்கு   ஒரு   தொலைக்காட்சி   விளம்பரம்   தயாரிக்கும்   வேலை   எனக்கு   அளிக்கப்பட்டது .  எம்   எஸ்   விஸ்வநாதனின்   பேட்டித்துணுக்குகளும்   அதில்   இடம்பெற்றன .  விஸ்வநாதனை   நேரில்   சந்திக்கும்   அனுபவத்தைப்பற்றிய   உள்ளக்கிளர்ச்சியுடன்   நான்   சென்னை   சாந்தோம்   ஹைரோடில்   இருந்த   அவரது   இல்லத்துக்கு   ஒளிப்பதிவுக்குழுவுடன்   விரைந்தேன் .  நிச்சயிக்கபப்ட்ட   நேரத்துக்கு   முன்பே   அவர்   படப்பிடிப்புக்குத்   தயாராக   இருந்தார் ,  வெள்ளையும்   வெள்ளையும்   உடையும்   அவருடன்   எபோதுமே   இருக்கும்   அந்த   ஆர்மோணியமுமாக .  மறக்கமுடியாத   எத்தனையோ   பாடல்களை   உருவாக்கியவர் ...  இந்தியாவின்   இணையற்ற   இசைமேதை ...  என்   கண்முன்   ரத்தமும்   சதையுமாக   உட்கார்ந்திருந்தார் . அவர்   எங்களை   மிக   எளிமையும்   பணிவுகாக   வரவேற்றார் .  அடுத்த   மூன்றுமணிநேரம்   அவரிடமிருந்து   தொடர்ச்சியாக   தன்   இசைவாழ்வின்   நினைவுகள்   பெருகிவந்தபடியே