முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 30, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்தான் மலையாளிகள் கற்க வேண்டிய மொழி

எழுதியவைர் மலையாள எழுத்தாளர்  சிஹாபுதீன் பொய்த்தும்கடவு தமிழாக்கம்  ஷாஜி சென்  மலையாளம் மற்றும் ஆங்கிலத்திற்கு அடுத்து கேரளப் பள்ளிகளில் முதன்மையான பயிற்று மொழியாக தமிழ்தான் இருக்க வேண்டும். கேரளாவின் கடந்தகாலக் கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் துணை உணர்வு என்பது தமிழ் மொழிதான். நமது மொழியியல் அடையாளங்கள் மற்ற எந்த மொழியையும் விட தமிழில்தான் உள்ளது. வட இந்தியாவிலிருந்து வெடித்த ஆரியமாக்கலை அற்புதமாக எதிர்த்து நின்ற மொழி தமிழ் மட்டும்தான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மலையாளம் , தமிழ் , கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகளில் தமிழ் மட்டும் தன்னிச்சையாகவே சமஸ்கிருதக் கூறுகளை ஒதுக்கி வைத்திருப்பதைக் காணலாம். தமிழின் தொன்மையும் அம்மொழியில் தொன்றுதொட்டே உருவாகியிருக்கும் ஒப்பிலா இலக்கியங்களும் அம்மண்ணின் இரு முக்கிய அடையாளங்களாகவும் அரசியல் உந்து சக்தியாகவும் இன்றும் இருக்கின்றன. சொற்களின் செல்வத்திலும் அவற்றின் இசைத் தன்மையிலும் உலகில் உள்ள பல பிரபல மொழிகளை விட தமிழ் முன்னணியிலேயே  உள்ளது. எந்தவொரு புதிய ஆங்கிலச் சொல்லுக்கும் இணையான வார்த்தைகள் தமிழில் உடனடியாக உருவாவதை நாம் காணலாம