முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர் 22, 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டி.எம்.சௌந்தரராஜன் - மக்களின் பாடகன்

சிறுவயதில் டி.எம்.எஸ்ஸின் பாட்டை அவ்வளவாக விரும்பியவன் அல்ல நான். ஆனால் டி.எம்.எஸ் பாடிய பாடல்களைக் கவனிக்காமல் ஒருநாள்கூடக் கடக்கும் சூழல் தமிழ்நாடு எல்லைப் பகுதியிலிருந்த எங்கள் கிராமங்களில் அப்போது இருக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவரது பாடல்களுக்குள்ளே சென்றேன். பின்னர் ஒருமுறை அவரது பாட்டு என் மனதில் தீவிரமான பதிவை உண்டுபண்ணியிருந்த ஒரே    காரணத்தால் அப்பாடலொன்றை பள்ளிநிகழ்ச்சியில் பாடினேன். பாடலின் வரிகளோ அதன் மெட்டோ எதுவுமே சரியாகத் தெரியாமல் மேடையேறி மானத்தை வாங்கினேன். மேற்கொண்டு வாழ்நாளில் நான் பாட்டே பாடக்கூடாது என்று எச்சரித்தார் தலைமையாசிரியர். ' அண்ணாச்சி '  என்று ஊரில் அனைவரும் அழைத்த ஒருவரிடமிருந்துதான் டி.எம்.எஸ் பற்றிய என் நினைவுகள் ஆரம்பிக்கின்றன.   ' அண்ணாச்சி '  என்றுதான் எல்லா தமிழர்களையும் எங்களூரில் சொல்வார்கள். மற்றபடி அவர் பெயரே தெரியவில்லை. அவர் ஒரு தேநீர் கடையில் தினக்கூலித் தொழிலாளர். கரிய மெலிந்த மனிதர். முகத்தில் சின்னப் பையன்களைப்போல ஒரு இனிய சிரிப்பு எப்போதும் உண்டு.   ' சத்தியமே லட்சியமாய் கொள்ளடா '  எனும் டி எம் எஸ் பாட்ட