முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பில்லி எனும் பேரழகியின் வாழ்க்கை

எங்கே பிறந்தாள் என்று தெரியவில்லை. கைக்குட்டிப் பருவத்திலேயே தாமிரபரணிக் கரையிலுள்ள சேரன்மகாதேவி ஊரின் ஒரு குடும்பம் அவளை வாங்கி வளர்த்தது. அவர்கள் அவளுக்கு வைத்த பெயர் பைரவி. அதைத் தவிர ஒருவயது வரைக்குமான அவளது வாழ்க்கை எப்படி இருந்தது என்று யாருக்கும் வெளிச்சமில்லை. ஒரு வயதானதும் அவர்கள் அவளை ஒரு நாய் வியாபாரிக்கு விற்றார்கள். அந்த வியாபாரி அவளை எனது நண்பரும் இயற்கை விவசாயியுமான ஃ பெலிக்ஸிற்கு விலைபேசி விற்றார். பல இனத்திலான நாய்களை வளர்த்து இனவிருத்தி செய்து விற்பதும் தனது விவசாயத்தின் ஒருபகுதியாக ச்   செய்து வந்தார் ஃ பெலிக்ஸ் . தன்னிடம் வந்து சேர்ந்த அழகான அந்த லாப்ரடார் பெண் நாய்க்கு அவர் ‘பெல்லி’ என்று பெயர் வைத்தார். பைரவியிலிருந்து பெல்லியாக மாற அவளுக்கு அதிகநாள் தேவைப்படவில்லை.  தடுப்பூசி போட அவளை ப் பக்கத்திலுள்ள சிறு நகரத்திற்கு க் கொண்டு ச் சென்றார்  ஃ பெலிக்ஸ் . அத்தகைய ஒரு சூழலையோ ஆள் கூட்டத்தையே அதுவரைக்கும் பார்த்திராத பெல்லி அவரது கையிலிருந்து தப்பித்து ஓடிவிட்டாள். முதலில் ஒரு ஆட்டோ ரிட்சாவில் ஏறி அமர்ந்தாள். பின் அங்கிருந்து இறங்கியோடி ஒரு மோட்டார் பைக் பயணி