முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மரணப் பூக்கள்

பேரப்பனின் வீட்டிலிருந்து ஏதோ சில பெண்களின் அழுகுரல் கள் உரத்துக் கேட்டன. பல   தோட்டவீடுகளுக்கு அப்பாலிருக்கும் அவரது வீட்டை நோக்கி ஓடினேன். பேரழகனான பேரப்பன் எனது அப்பாவின் மூத்த அண்ணன். பால்லியத்தில் நான் பார்த்த அழகும் கம்பீரமும் கொண்ட முதன்முதல் ஆண். அப்பா அளவிற்கு உயரம் இல்லை என்றாலும் தோல் வண்ணம் அப்பா மாதிரி கருப்பு அல்ல. வெளிர் கோதுமை நிறம். வட்ட முகத்தின்மேல் வடிவான மூக்கும்   அடர்த்தியான மீசையும். வேட்டி ஜிப்பா தான் ஆடை. வேறுவேறு வண்ணங்களில் அழகான ஜிப்பாக்களை அணிவார். அழகாக முடிவெட்டிய தலைமேல் பெரும்பாலும் எதாவது இளம் வண்ணத் துண்டால் வட்டக்கட்டோ முண்டாசோ இருக்கும். தலை நிமிர்த்தி கைகளை இருபுறமும் தாளகதியில் ஆட்டிக்கொண்டு சுறுசுறுப்பாக நடப்பார். ஆனால் பேரப்பனுக்கு நேர்மாறானது அவரது மனைவியின் தோற்றம். இருண்ட தோலும் நீண்டுருண்ட முகமும் துருத்தி நிற்கும் பற்களும் கொண்ட பேரம்மாவை ஆணழகனான பேரப்பன் எதற்குத் திருமணம் செய்துகொண்டார் என்று பலமுறை நான் யோசித்ததுண்டு. எந்தவகையிலும் பேரப்பனுக்கு இணையில்லை என்றாலும் சாதுவான ஒரு பெண்மணிதான் பேரம்மாவும். தனது பாரங்கள் அனைத்தையும் கடவுள்

முள்ளரும்பு மரங்கள் - பகுதி 1

முள்ளரும்பு மரங்களின் முழுப்பெயர் முள்ளரும்புக் கூம்பு தேவதாரு அல்லது ப்ரிசில்கான் பைன் . மிகக் கடுமையான வானிலைச் சூழல்களில் வளரும் மரங்கள் இவை. மழையே பெய்யாமல் , ஒன்றும் விளையாமல் வறண்டுலர்ந்த குத்துயர மலைப்பாறைப் பகுதிகளில் இவை வளர்கின்றன. வெள்ளைச் சுண்ணாம்பு கற்களின்மேல் வேரூன்றி அணுவணுவாக , நூற்றாண்டுகளினூடாகத் தலை நிமிர்த்துகின்றன. ஒருபோதும் பசுமை மாறாத இந்த ஊசியிலை மரத்தின் வாழ்நாள் சாதாரணமாக 5000 - 6000 ஆண்டுகள்! அதாவது உலகின் மிகவும் பழமையானதும் இன்றும் உயிருடனிருப்பதுமான ஒரேயொரு உயிரினம் முள்ளரும்பு மரங்கள்.  இந்த அதிசய மரத்தின் கன்றுகள் பல நூற்றாண்டுகாலம் புதிதாக முளைப்பதில்லை! இளஞ்செடிகள் துளிர்விட்டு இனப்பெருக்கம் நடப்பது ஆயிரம் ஆண்டுகளில் எப்பொழுதோ ஓரிருமுறை! மிகவும் மந்தமாகத்தான் இம்மரத்தின் வளர்ச்சி. ஆனால் இதன் இலைகளும் அரும்புகளும் ஐம்பதாண்டுகளுக்கும் மேல் உதிராமல் பசுமையுடன் நீடித்து நிற்பவை. நில்லாமல் வீசும் காற்றுகளாலேயோ சுட்டெரிக்கும் வெய்யிலாலேயோ உறைத்து ஊறவைக்கும் கடும் பனியினாலேயோ முள்ளரும்பு மரங்களை எதுவும் செய்துவிட முடியாது. விலங்குகளோ கிருமிகீடங்களோ மரத்த