முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

திரும்பிவராத மின்மினிகள்

கோதண்டபாணி ஆடியோ லேப்ஸ் சென்னையின் மிகப்பெரிய, புகழ்பெற்ற ஒலிப்பதிவுகூடம். பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்குச் சொந்தமானது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையிசை ஒலிப்பதிவு மையங்களில் ஒன்றாக விளங்கிய இடம். தற்போது அது விற்பனைக்கு வந்துள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்த செய்தியை முதலில் என்னால் நம்பமுடியவில்லை. ஆனால் அது உண்மையே என்று திரையிசைத் துறை நண்பர்கள் பலர் உறுதியாகச் சொன்னார்கள். கடுமையான பொருளதார நெருக்கடியால்தான் எஸ்.பி. பி இந்த முடிவை எடுத்துள்ளாராம். 45 ஆண்டுகளாக இடைவிடாமல் பல மொழிகளில் தொடர்ந்து பாடிவரும் ஒரு மாபெரும் நட்சத்திரப் பாடகனுக்கா இந்த நிலை என்று யோசிப்பது சங்கடமாக இருந்தது. பணத்தின் நிலையற்ற தன்மையும் வாழ்வின் சுழற்சியும் எவ்வளவு விசித்திரமானது. திரை இசைத்துறையில் பெரும்புகழடைந்த பலரையும் நான் முதலில் சந்தித்த இடம் அந்த கோதண்டபாணி ஒலிப்பதிவுக்கூடம்தான். பிரபல பின்னணிப் பாடகி மின்மினி அவர்களில் ஒருவர். ஒரே ஒரு பாடலின் வாயிலாக ஏ.ஆர் ரஹ்மானுக்கு இணையான தேசியப் புகழைப் பெற்ற அந்தப் பாடகிக்கு பின்னர் என்னவாயிற்று என்றோ, அவர் எங்கே போனார் என்றோ யோசிப்பவர்கள் இன்

டி.எம்.சௌந்தரராஜன் - மக்களின் பாடகன்

சிறுவயதில் டி.எம்.எஸ்ஸின் பாட்டை அவ்வளவாக விரும்பியவன் அல்ல நான். ஆனால் டி.எம்.எஸ் பாடிய பாடல்களைக் கவனிக்காமல் ஒருநாள்கூடக் கடக்கும் சூழல் தமிழ்நாடு எல்லைப் பகுதியிலிருந்த எங்கள் கிராமங்களில் அப்போது இருக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவரது பாடல்களுக்குள்ளே சென்றேன். பின்னர் ஒருமுறை அவரது பாட்டு என் மனதில் தீவிரமான பதிவை உண்டுபண்ணியிருந்த ஒரே    காரணத்தால் அப்பாடலொன்றை பள்ளிநிகழ்ச்சியில் பாடினேன். பாடலின் வரிகளோ அதன் மெட்டோ எதுவுமே சரியாகத் தெரியாமல் மேடையேறி மானத்தை வாங்கினேன். மேற்கொண்டு வாழ்நாளில் நான் பாட்டே பாடக்கூடாது என்று எச்சரித்தார் தலைமையாசிரியர். ' அண்ணாச்சி '  என்று ஊரில் அனைவரும் அழைத்த ஒருவரிடமிருந்துதான் டி.எம்.எஸ் பற்றிய என் நினைவுகள் ஆரம்பிக்கின்றன.   ' அண்ணாச்சி '  என்றுதான் எல்லா தமிழர்களையும் எங்களூரில் சொல்வார்கள். மற்றபடி அவர் பெயரே தெரியவில்லை. அவர் ஒரு தேநீர் கடையில் தினக்கூலித் தொழிலாளர். கரிய மெலிந்த மனிதர். முகத்தில் சின்னப் பையன்களைப்போல ஒரு இனிய சிரிப்பு எப்போதும் உண்டு.   ' சத்தியமே லட்சியமாய் கொள்ளடா '  எனும் டி எம் எஸ் பாட்ட