அன்புள்ள பிரதாப் போத்தன் , எனக்கு பத்து வயதிருக்கும்போதுதான் நீங்கள் நடித்த முதல் திரைப்படம் ‘ஆரவம்’ வெளியானது. சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் அந்த அதிசயப் படத்தைப் பார்த்தேன். ஆனால் தங்களது இரண்டாவது திரைப்படம் ‘தகரா’ வெளியான காலத்திலேயே பார்த்து விட்டேன். வயது வந்தவர்களுக்கு மட்டுமான அப்படத்தைப் பார்க்கும்போது எனக்குப் பதினோரு வயது! உங்களிடம் ஒருமுறை இதைச் சொன்னபோது ‘ பதினைந்து வயது மட்டுமேயிருந்த அப்படத்தின் கதாநாயகி சுரேகாவுக்கே படம் பார்க்க அனுமதி கிடைத்திருக்காதே ’ என்று அந்தப் பல்தெரியாச் சிரிப்பைச் சிரித்தீர்கள். அக்காலகட்டத்தின் ஓர் ஒழுக்க நடுக்கமாகவே மாறிய சுரேகாவின் காமக்கிளரச்சியூட்டும் காட்சிகளை விட நீங்கள் நடித்த மூளை வளர்ச்சி குன்றிய , அழுக்கனான கிராமத்து இளைஞன்தான் என்னைக் கவர்ந்தான் என்று உங்களிடம் சொன்னபோது ‘அது பொய்’ என்று சொல்லி மீண்டும் சிரித்தீர்கள். அப்பாத்திரத்தில் வந்தது நீங்களா என்று வியக்க வைக்குமளவில் இருந்தது , அதற்கு ஓரிரு மாதங்களில் வெளியான உங்களது முதல் தமிழ்ப்படம் ‘அழியாத கோலங்க’ளின் பாத்திரம். அவன் ஒரு நவநாகரீக இளைஞன். நீலவண்ண டெனிம் ஜீன்ஸ் , பெல் ப...
எழுதியவைர் மலையாள எழுத்தாளர் சிஹாபுதீன் பொய்த்தும்கடவு தமிழாக்கம் ஷாஜி சென் மலையாளம் மற்றும் ஆங்கிலத்திற்கு அடுத்து கேரளப் பள்ளிகளில் முதன்மையான பயிற்று மொழியாக தமிழ்தான் இருக்க வேண்டும். கேரளாவின் கடந்தகாலக் கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் துணை உணர்வு என்பது தமிழ் மொழிதான். நமது மொழியியல் அடையாளங்கள் மற்ற எந்த மொழியையும் விட தமிழில்தான் உள்ளது. வட இந்தியாவிலிருந்து வெடித்த ஆரியமாக்கலை அற்புதமாக எதிர்த்து நின்ற மொழி தமிழ் மட்டும்தான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மலையாளம் , தமிழ் , கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகளில் தமிழ் மட்டும் தன்னிச்சையாகவே சமஸ்கிருதக் கூறுகளை ஒதுக்கி வைத்திருப்பதைக் காணலாம். தமிழின் தொன்மையும் அம்மொழியில் தொன்றுதொட்டே உருவாகியிருக்கும் ஒப்பிலா இலக்கியங்களும் அம்மண்ணின் இரு முக்கிய அடையாளங்களாகவும் அரசியல் உந்து சக்தியாகவும் இன்றும் இருக்கின்றன. சொற்களின் செல்வத்திலும் அவற்றின் இசைத் தன்மையிலும் உலகில் உள்ள பல பிரபல மொழிகளை விட தமிழ் முன்னணியிலேயே உள்ளது. எந்தவொரு புதிய ஆங்கிலச் சொல்லுக்கும் இணையான வார்த்தைகள் தமிழில் உடனடியாக உ...