முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரித்விக் கட்டக் : இந்திய மாற்று சினிமாவின் வானுயரம்

ரித்விக் கட்டக் பிறந்து தொண்ணூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. இதையொட்டி ரிக்விக் கட்டக்கின் மனைவி ஷுரரமா கட்டக் மற்றும் அவரது மகள் சம்ஹிதா கட்டக் தலைமையிலான ரித்விக் கட்டக் நினைவு அறக்கட்டளையும் சினி சென்ட்ரல் கல்கத்தா என்ற திரைப்பட அமைப்பும் இணைந்து கட்டக்கின் தொண்ணூறாவது பிறந்த நாளான நவம்பர் 4 , 2015 அன்று கல்கத்தாவில் ஒரு மாபெரும் விழாவை எடுத்தார்கள். அவ்விழாவின் பிரதான உரையை தமிழ் எழுத்தாளரும் விமர்சகரும் நடிகருமான ஷாஜி நிகழ்த்தினார். அந்த ஆங்கில உரையின் தமிழாக்கம் இது. சென்னையிலிருந்து வருகிறேன். வங்காளத்தில் இன்று எப்படியென்று எனக்குத் தெரியவில்லை ஆனால் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ், மலையாளத் திரையுலகில் கலைப் படங்கள் மற்றும் மாற்றுச் சினிமாவை நேசிப்பவர்களின் நடுவே தவிர்க்க முடியாத ஒரு தொன்மை நாயகனாக என்றுமே இருக்கிறார் ரித்விக் கட்டக். மலையாளத்திலும் தமிழிலும் அவரைப்பற்றி பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. அவர் எழுதிய புத்தகங்களின் மொழிபெயர்ப்புகள், அவரது வாழ்க்கை வரலாறு என அவரது கலையையும் வாழ்க்கையையும் பற்றியான பல ஆக்கங்கள் தென்னிந்திய மொழிகளில் இருக்கின்றன. அவரைப் பற்றி நாங்