முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ச ரி க ம தெரியாத இசை மாமேதை : கே ஜே ஜாய்

முறையான இசைப் பயிற்சி இல்லாதவர் , ஸ்வர ஸ்தானங்கள் அறியாதவர் , ராகங்களை  அடையாளங்காணத் தெரியாதவர், இசைக் குறிப்புகளை எழுதவோ படிக்கவோ தெரியாதவர், பாடும் திறன் அறவே இல்லாதவர் என்று அடுக்கிக்கொண்டே போகுமளவில் ‘இசையறிவு’ இல்லாமலிருந்தவர் கே ஜே ஜாய். ஆனால் எனது வாழ்நாளில் நான் நேரடியாகச் சந்தித்துப் பழகிய இசையமைப்பாளர்களில், இசைக் கலைஞர்களில் மனித சாத்தியமற்றது என்றே சொல்லக்கூடிய இசைத்திறன் படைத்திருந்தவர் அவர் ஒருவரே. அக்கார்டியன் , மின்னிசை கீபோர்ட் , ஹார்மோனியம் ஆகிய கருவிகளை இசைக்கும் ஒரு முன்னணிக் கருவியிசைக் கலைஞராக 1965 முதல் தென்னிந்தியத் திரையிசையில் கோலோச்சிய கே ஜே ஜாய் 1975 ல் ஓர் இசையமைப்பாளராக மலையாளத் திரையிசையில் நுழைந்தார். தொடர்ந்துவந்த பத்தாண்டுகளில் மலையாளத் திரையிசையின் முகத்தையே மாற்றியமைத்தார். இசை கே ஜே ஜாய் என்றால் அப்பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்குமளவில் பிரபலமாகும் என்பது உறுதியாக இருந்தது அக்காலத்தில். எங்களது விவசாய மலைக் கிராமங்களில் இஞ்சி , கப்பை , நெல் போன்றவற்றைப் பயிரிட்டு வேலை செய்யும் பெண்களும் ஆண்களும் வேலையின் அலுப்பையும் அயர்ச்சியையும் மறக்க கே

வீடியோ சினிமாக்காரன்

முள்ளரும்பு மரங்கள் – 6 ஓவியங்கள் : ரவி பேலெட்    தவணை முறையில் பணம் செலுத்தி பல புத்தகங்களை வாங்கியிருந்தான் நண்பன் பி கெ ஸ்ரீநிவாசன். ஷாஜி என்றுதான் அவனுடைய விளிப்பெயருமே. என்னைவிட நான்கு வயது பெரியவன். சினிமா மேலும் இலக்கியத்தின்பாலும் இருந்த மோகம்தான் எங்களை நண்பர்களாக்கியது. அந்தப் புத்தகங்களை இரவல் வாங்கி நானும் படித்தேன். ஆனால் சினிமாத் திரைக்கதைப் புத்தகங்கள் மட்டும் அவன் எனக்குப் படிக்கத் தரவில்லை. யாருக்குமே கொடுக்காமல் சதாநேரமும் அவற்றைப் படித்துக்கொண்டிருந்தான். அவ்வப்போது சில நாடகங்களை எழுதவும் அவற்றில் நடிக்கவும் செய்தான். ஆனால் பட்டப் படிப்பை முடித்தவுடன் தனது அண்ணன் பின்னால் குஜராத் சென்று அங்கு ஏதோ பள்ளியில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தான். சிலகாலம் கழித்து அவன் ஊருக்குத் திரும்பி வந்தது ஒரு மலையாளத் திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியராக! கமல்ஹாஸன் கதாநாயகனான ‘ஞான் நின்னெ பிரேமிக்குந்நு’ , ஸ்ரீதேவியை முதன்முதலில் கதாநாயகியாக்கிய ’நாலுமணிப் பூக்கள்’ , மது – ஜெயபாரதி இணைந்து நடித்த ‘காயலும் கயறும்’ போன்ற பெரும் படங்களை இயக்கிய கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கும் திரைப்படம். பல