முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் பாடும்போது

1999 ல்   எச்   எம்   வி   இசை   நிறுவனம்  ' லெஜென்ட்ஸ் '  என்ற   தலைப்பில்   விஸ்வநாதன்   ராமமூர்த்தியின்   இசைத்தொகையொன்றை வெளியிட்டது .  அதற்கு   ஒரு   தொலைக்காட்சி   விளம்பரம்   தயாரிக்கும்   வேலை   எனக்கு   அளிக்கப்பட்டது .  எம்   எஸ்   விஸ்வநாதனின்   பேட்டித்துணுக்குகளும்   அதில்   இடம்பெற்றன .  விஸ்வநாதனை   நேரில்   சந்திக்கும்   அனுபவத்தைப்பற்றிய   உள்ளக்கிளர்ச்சியுடன்   நான்   சென்னை   சாந்தோம்   ஹைரோடில்   இருந்த   அவரது   இல்லத்துக்கு   ஒளிப்பதிவுக்குழுவுடன்   விரைந்தேன் .  நிச்சயிக்கபப்ட்ட   நேரத்துக்கு   முன்பே   அவர்   படப்பிடிப்புக்குத்   தயாராக   இருந்தார் ,  வெள்ளையும்   வெள்ளையும்   உடையும்   அவருடன்   எபோதுமே   இருக்கும்   அந்த   ஆர்மோணியமுமாக .  மறக்கமுடியாத   எத்தனையோ   பாடல்களை   உருவாக்கியவர் ...  இந்தியாவின்   இணையற்ற   இசைமேதை ...  என்   கண்முன்   ரத்தமும்   சதையுமாக   உட்கார்ந்திருந்தார் . அவர்   எங்களை   மிக   எளிமையும்   பணிவுகாக   வரவேற்றார் .  அடுத்த   மூன்றுமணிநேரம்   அவரிடமிருந்து   தொடர்ச்சியாக   தன்   இசைவாழ்வின்   நினைவுகள்   பெருகிவந்தபடியே

டி.ஆர். மகாலிங்கம் - செந்தமிழ் தேன் குரலோன்

  எங்களூரில் இருந்த வயதானவரான லூக்கோஸ் சேட்டனிடமிருந்துதான் டி.ஆர்.மகாலிங்கத்தைப்பற்றி முதன்முதலில் கேள்விப்பட்டேன். ஒருமுறை நான் சமகாலத்   திரையிசை பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார் “இப்போதுள்ள பையன்கள் பாடுவதெல்லாம் தண்ணீர்ப் பாட்டுகள். நீயெல்லாம் தியாகராஜ பாகவதரும் டி.ஆர்.மகாலிங்கமும் பாடிய அசலான கர்நாடக சங்கீதப் பாடல்களைக் கேட்க வேண்டும்.” அவர்களின் சிலபாடல்களை அவர்   நகல்செய்து   பலவீனமாகப் பாடியும் காட்டினார். டி.ஆர்.மகாலிங்கத்தைத் தான் தன் கண்களாலேயே பார்த்தது உண்டு என்று சொல்லி சிறுவனான என்னை அவர் ஆச்சரியப்படுத்தினார். ஞான சௌந்தரி என்ற படத்தின் பொன்விழாக் கொண்டாட்டத்துக்காக அதன் கதாநாயகனான டி. ஆர்.மகாலிங்கம் கொச்சிக்கு வந்தபோதுதான் லூக்கோஸ் சேட்டன் அவரைப் பார்த்தாராம். 1948 ல் தயாரிக்கப்பட்ட அந்தப் படம் ஒரு கிறித்தவப் பக்திப்படம். மலையாளியான ஜோசஃப் தளியத் அதை இயக்கியிருந்தார். ஞான சௌந்தரியின் பாடல்கள்    அக்காலத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளத்திலும் பெரும் புகழ்பெற்றிருந்தன. டி.ஆர்.மகாலிங்கம் கொச்சி பத்மா திரையரங்கில் கூடிய பல்லாயிரம் ரசிகர்கள் நடுவே