முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கம்யூனிஸ சினிமாவும் கம்யூனிஸமும் கேரளத்தில்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்  புன்னப்ரா, வயலார் பகுதிகளில்    தென்னை நாரிலிருந்து கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்த அவர்களுக்கு கிடைக்கக்கூடிய தினக்கூலி ஒருவேளை  உணவிற்கு கூட பற்றாமலிருந்தது.  எதிர்த்து நின்று போராடுவத ற்கோ    தட்டிக் கேட்பத ற்கோ  எந்த சக்தியும் இல்லாமலிருந்த அம்மக்களைத் தமது   உணவிற்காகவும் உரிமைகளுக்காகவும்  போராடுவோம்   என்ற   மன நிலைக்கு எழுப்பி ஒரு போராட்டத்தைத் துவங்கிவைத்தது அப்போது அங்கு துளிர்விட்டுக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் அமைப்பு. வெகுவிரைவில் ஒரு பெரும் அலையாக அப்போராட்டம் மாறியது. கேரளத்தில் மக்களிடம் வரவேற்பு பெற்று இன் று  வரைக்கும் ஆட்சியில் இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்கப் புள்ளி இதுதான் .    1946ல் நிகழ்ந்த  புன்னப்ரா - வயலார் மக்கள்  எழுச்சி. பிரட்டீஷாரின் உதவியுடன் இயங்கிக் கொண்டிருந்த திருவிதாம்கூர் அரசரின் திவான் சி பி ராமசாமி ஐயர் போலீசாரையும் ராணுவத்தையும்  பயன்படுத்தி அம்மக்களுக்கு எதிராக போர் தொடுத்தார்.    உயர்ரக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு ராணுவம் அம்மக்கள

டி எம் கிருஷ்ணா - மக்சேசே விருதில் என்ன இருக்கிறது?

  தொள்ளாயிரத்தித் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நான் இசைப்பதிவு மேலாளராக பணியாற்றிவந்த மேக்னா சவுண்ட் நிறுவனம் கர்நாடக இசைக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கியது. பிராமணர்கள் என்று சொல்லக்கூடிய யாருமே அப்போது எங்கள் நிறுவனத்தில் இருந்ததில்லை. அக்காலம் ஏ வி எம், சங்கீதா போன்ற இசை நிறுவனங்கள்தாம் கர்நாடக இசையை பரவலாக வெளியிட்டு வந்தனர். ஆனால் இசை விற்பனையில் உலகத்தரமான வழிமுறைகளை நாங்கள்தாம் கடைப்பிடித்துவந்தோம். உலகளாவிய இசை விற்பனை நிறுவனமான வார்னர் பிரதர்ஸின் துணை அமைப்பு எங்களது நிறுவனம். எங்களுக்கிருந்த கனக்கச்சிதமான வியாபார உத்திகளால் தமது இசை, ரசிகர்களிடம் எளிதில் சென்றடையும் என்று எண்ணிய பல கர்நாடக இசைஞர்கள் எங்களுடன் இணைந்தனர். அவர்களில் முக்கியமானவர் டி எம் கிருஷ்ணா. அப்போது டி எம் கிருஷ்ணாவுக்கு 17-18 வயது இருக்கும். துடிப்பான இளைஞன். மிகவும் முதிர்ச்சியுள்ள ஆழ்ந்த குரல். அவரது முகத்தைப் பாராமல் அவ்விசையைக் கூர்ந்து கேட்டால் மிகுந்த முதிர்ச்சியும் நிதானமும் அக்குரலில் தெரியும். பாடும்முறையில் அப்படியே செம்மங்குடி பாணியின் நகலெடுப்பு இருக்கும். கிருஷ்ணா சமகால கர்நாடக இசையின் ஒரு முக்

புத்தகத்தின் இறுதிப் பக்கங்கள்...

‘’டேய்…. ஒழுங்கு மரியாதையா புத்தகங்களத் திருப்பிக் கொடுத்துரு. ஒனக்கான கடைசி எச்சரிக்கை இது. ஒங்கப்பாட்ட சொல்லிட்டு லைப்ரரி ரூல்படி ஒம்மேல கடுமையான நடவடிக்கை எடுத்துருவேன்’’ என்னை எங்கே பார்த்தாலும் இப்படிச் சொல்லிப் பயமுறுத்துவார் மானிச் சேட்டன். அவரது கண்ணில் படாமல் ஒளிந்து ஒளிந்து சுற்றிக் கொண்டிருந்தேன். இருந்தும் சிலசமயம் அவர் முன்னால் வசமாகச் சிக்கி விடுவேன். எண்ணற்ற ’கடைசி’ எச்சரிக்கைகள் கடந்த பின்னரும் அந்தப் புத்தகங்களை என்னால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. எப்படி முடியும்? அந்த விமலா ஒருத்திதானே இதற்கெல்லாம் காரணம்! அவளுக்கென்ன? நடவடிக்கை வரப்போவது என்மேல்தானே! செண்பகப் பாறை பொது மக்கள் நூலகத்தின் பொறுப்பாளரும் நூலகரும்தான் மானிச் சேட்டன். அன்பான மனிதர். யாரிடமும் கோபப்படாதவர். ஆனால் அவரையே கடும் கோபத்திற்கு ஆளாக்கியது வெறும் பதினைந்து வயதிலிருந்த எனது சில செயல்பாடுகள்! அப்பாவின் பெயரில் நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்துகொண்டிருந்த எனது வாசிப்பு ஆர்வத்தைப் பார்த்து என்னையும் நூலக உறுப்பினராக்கியவர் மானிச் சேட்டன். ஒரு தடவை ஒரு புத்தகம்தான் கிடைக்கும். ஆனால் எனது ஆர்வத் த