முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பாடகனின் மறைவு

192 5 காலகட்டம். ஒலி வாங்கிகளோ ஒலி பெருக்கிகளோ ஒலிப்பதிவு தொழில்நுட்பங்களோ இல்லை. துல்லியமான கர்நாடக இசையில் ,  கமாஜ் ராகத்தில்   ’காமி சத்தியபாமா கதவைத்திறவாய்’   என்று உச்சஸ்தாயியில் பாடிக்கொண்டு மேடையில் நடிக்கிறார் எஸ். ஜி. கிட்டப்பா. அவர் ஒரு மரபிசைப் பாடகர். ஆழ்ந்த இசைஞானமும் ஆன்மா ததும்பும் பாடும்முறையும் கொண்டவர். ஆனால் தன்னை ஒரு நடிகராகத்தான் அவர் முன்வைக்கிறார்! இசைஞானமும் பாடும் திறனும் மேடையில் தோன்றி நடிப்பதற்கான அடிப்படைத்   தகுதி மட்டுமே அவருக்கு! நவீன தொழில்நுட்பத்தின் எந்தவொரு உதவியுமில்லாமல் இங்கு இயங்கிய கடைசிப்   பாடக நடிகர் அவர். ஒலித் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டக் குதிப்பான பேசும் திரைப்படங்களின் வருகைக்கு முன்னரே அவர் இறந்துபோனார். 1930களில் ஒலியுள்ள திரைப்படங்கள் வந்தபோதும் இசைஞானிகளான பாகவதர்கள்தாம் நடிகர்களாகத் தோன்றினார்கள். ஒவ்வொரு திரைப்படத்திலும் எண்ணற்ற பாடல்கள். முக்கால் பங்கு வசனங்களும் பாடல்களே! பி யூ சின்னப்பா பாகவதர் வந்தார் , எம் கே தியாகராஜ பாகவதர் வந்தார். பெயரில் பாகவதர் என்று இல்லை என்றாலும் சி எஸ் ஜெயராமனும் டி ஆர் மகாலிங்கமும் ஜி என் பாலசுப

முதல் சினிமாக்கள்

முள்ளரும்பு மரங்கள் – 3 ஓவியங்கள் : ரவி பேலெட்    மயிலு குஞ்சு மோன் அப்பாவின் தூரத்துச் சொந்தக்கார ர் . தன்னுடைய கிராமத்தில் ஒரு சினிமாக் கொட்டகைக்குள்ளே நடந்த அடிதடியில் சிக்கி அங்கிருந்து தலைமறைவாகி எங்களூருக்கு ஓடிவந்தவ ர் . மயிரு என்பதைச் சற்றே மாற்றிய மயிலு எனும் தனது பட்டப் பெயரை அவர் வெறுத்தார். “டேய் மயிலு..” என்று அழைப்பவர்களிடம் “பல கத்திக் குத்துக் கேசுல போலீஸு தேடிட்டிருக்கிற ஆளு நானு.. தெ ரியு மா டா வெண்ணைகளா ?” என்றெல்லாம் வீம்புக்குக் கேட்பார். ஆனால் யாரோ கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டதில் பயந்து நடுங்கி ஊரைவிட்டே ஓடி மலையேறி வந்தவன்தான் மயில் என்று என் அம்மா சொன்னார். எங்களூரில் மற்ற சொந்தங்கள் இருந்தும் பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான் தங் கினார். நேராநேரம் ருசியாக உண்பதும் எந்நேரமும் போர்த்திக்கொண்டு தூங்குவதும் மயிலின் கட்டாயத் தேவைகளாக இருந்தன. “டேய் குஞ்சுமோனே.. இந்த வீட்டுல எவ்வளவு வேல கெடக்குதுடா? எதாவதொண்ணுக்கு நீயும் கொஞ்சம் ஒதவக்கூடாதா?” என்று என் அம்மா ஒரேயொரு முறை கேட்டதற்கு மயில் செய்த காரியம் தெரியுமா? அம்மாவை ஏறெடுத்துப் பார்க்க ப் பிடிக்காத ஒரு நாத்

மரணப் பூக்கள்

பேரப்பனின் வீட்டிலிருந்து ஏதோ சில பெண்களின் அழுகுரல் கள் உரத்துக் கேட்டன. பல   தோட்டவீடுகளுக்கு அப்பாலிருக்கும் அவரது வீட்டை நோக்கி ஓடினேன். பேரழகனான பேரப்பன் எனது அப்பாவின் மூத்த அண்ணன். பால்லியத்தில் நான் பார்த்த அழகும் கம்பீரமும் கொண்ட முதன்முதல் ஆண். அப்பா அளவிற்கு உயரம் இல்லை என்றாலும் தோல் வண்ணம் அப்பா மாதிரி கருப்பு அல்ல. வெளிர் கோதுமை நிறம். வட்ட முகத்தின்மேல் வடிவான மூக்கும்   அடர்த்தியான மீசையும். வேட்டி ஜிப்பா தான் ஆடை. வேறுவேறு வண்ணங்களில் அழகான ஜிப்பாக்களை அணிவார். அழகாக முடிவெட்டிய தலைமேல் பெரும்பாலும் எதாவது இளம் வண்ணத் துண்டால் வட்டக்கட்டோ முண்டாசோ இருக்கும். தலை நிமிர்த்தி கைகளை இருபுறமும் தாளகதியில் ஆட்டிக்கொண்டு சுறுசுறுப்பாக நடப்பார். ஆனால் பேரப்பனுக்கு நேர்மாறானது அவரது மனைவியின் தோற்றம். இருண்ட தோலும் நீண்டுருண்ட முகமும் துருத்தி நிற்கும் பற்களும் கொண்ட பேரம்மாவை ஆணழகனான பேரப்பன் எதற்குத் திருமணம் செய்துகொண்டார் என்று பலமுறை நான் யோசித்ததுண்டு. எந்தவகையிலும் பேரப்பனுக்கு இணையில்லை என்றாலும் சாதுவான ஒரு பெண்மணிதான் பேரம்மாவும். தனது பாரங்கள் அனைத்தையும் கடவுள்