முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வீடியோ சினிமாக்காரன்

முள்ளரும்பு மரங்கள் – 6 ஓவியங்கள் : ரவி பேலெட்    தவணை முறையில் பணம் செலுத்தி பல புத்தகங்களை வாங்கியிருந்தான் நண்பன் பி கெ ஸ்ரீநிவாசன். ஷாஜி என்றுதான் அவனுடைய விளிப்பெயருமே. என்னைவிட நான்கு வயது பெரியவன். சினிமா மேலும் இலக்கியத்தின்பாலும் இருந்த மோகம்தான் எங்களை நண்பர்களாக்கியது. அந்தப் புத்தகங்களை இரவல் வாங்கி நானும் படித்தேன். ஆனால் சினிமாத் திரைக்கதைப் புத்தகங்கள் மட்டும் அவன் எனக்குப் படிக்கத் தரவில்லை. யாருக்குமே கொடுக்காமல் சதாநேரமும் அவற்றைப் படித்துக்கொண்டிருந்தான். அவ்வப்போது சில நாடகங்களை எழுதவும் அவற்றில் நடிக்கவும் செய்தான். ஆனால் பட்டப் படிப்பை முடித்தவுடன் தனது அண்ணன் பின்னால் குஜராத் சென்று அங்கு ஏதோ பள்ளியில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தான். சிலகாலம் கழித்து அவன் ஊருக்குத் திரும்பி வந்தது ஒரு மலையாளத் திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியராக! கமல்ஹாஸன் கதாநாயகனான ‘ஞான் நின்னெ பிரேமிக்குந்நு’ , ஸ்ரீதேவியை முதன்முதலில் கதாநாயகியாக்கிய ’நாலுமணிப் பூக்கள்’ , மது – ஜெயபாரதி இணைந்து நடித்த ‘காயலும் கயறும்’ போன்ற பெரும் படங்களை இயக்கிய கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கும் திரைப்படம். பல

பாட்டுக்கு நான் பாடுபட்டேன்...

முள்ளரும்பு மரங்கள் – 4 ஓவியங்கள் : ரவி பேலெட்   மயிலாடும்பாறை ஊரில் ஒரு பெரிய   இசை   நிகழ்ச்சி .   அதில் தமிழ் பாடல்களைப் பாட என்னை   அழைத்திருந்தார்கள் .   தமிழ் ,   ஹிந்தித் திரைப் பாடல்கள் எனக்கு பெரும் மோகமாக மாறிவிட்டிருந்த காலம் அது.   புத்தம்புதிய பாடல்களைக் கேட்க பாட்டுக் கடைகளுக்கு முன்னால் சென்று நிற்பேன். கேட்கும் பாடல்களை மனப்பாடம் பண்ணிப் பாடித்திரிவேன். அதைக்கேட்ட சிலர் எங்கள் ஊரில் நிகழ்ந்த சில   சிறு   நிகழ்ச்சிகளில் பாட அழைத்தார்கள்.   பின்னர்   தூரத்து ஊர்களிலிருந்தும்   சில   அழைப்புகள் வரத் தொடங்கின .   டி எம் எஸ் ,   மலேசியா வாசுதேவன் ,   எஸ் பி பி ஆகியோர் பாடிய தாளவேகம் கொண்ட பாடல்களை மட்டுமே   பாடுவேன். ஆர் டி பர்மன் ,   பப்பி லஹிரி போன்றவர்கள் இசையமைத்து ,   அவர்களே   பாடிய   துள்ளலான சில   ஹிந்திப் பாடல்களையும் பாடுவேன். மெதுவான   மெல்லிசைப் பாடல்களைப் பாடினால்   இந்த   அரைகுறைப் பாடகனின் சாயம் வெளுத்து போகும் .  தமிழர்கள் அதிகமாக வாழும் ஏலத்தோட்டப் பகுதி   மயிலாடும்பாறை.   அங்கே சென்று   தமிழ் ஆட்களுக்கு முன்னால் தமிழ் பாடல்களைப் பாடுவதை யோசித்தபோதே எனக்குக்