முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

யதார்த்தத் இசை நிகழ்சிகளும் இசையின் யதார்த்தமும்

பெண்மைமிக்க ஆணாக மலையாள நடிகர் திலீப் நடித்து மலையாளத்தில் வெற்றிபெற்ற 'சாந்துபொட்டு' என்ற படத்தில் அவரது பாத்திரம் சக தோழிகளுடன் ஒசிந்து ஒசிந்து செல்லும்போது ''எல்லாரும் எங்கே போறீங்கடி?''என்று ஒருவர் கேட்பார். ''நாங்கள்லாம் பக்கத்துவீட்டிலே டீவி சீரியல் பார்த்து அழுறதுக்குப் போறோம்...'' என்பார் சிரிப்புடன் அப்பாத்திரம். அது ஒரு காலம். பின்னர் இந்தியத் தொலைக்காட்சிகளில் கண்ணீர் கதைத்தொடர்களை விட பலமடங்கு பிரபலமானது 'யதார்த்த' இசை நிகழ்ச்சிகள். ஆங்கிலத்தில் ரியாலிட்டி மியூசிக் ஷோ எனப்படுப்வை. இந்நிகழ்ச்சிகளின் பல்வேறு வடிவங்கள் ஏறத்தாழ எல்லா மொழித் தொலைக்காட்சிகளிலும் காணக்கிடைத்தன. ஆயிரக்கணக்கான பாடகர்களிலிருந்து சிலர் தேர்வு செய்யப்பட்டு மேடையில் பாடவைக்கப்பட்கிறார்கள். நடுவர்களும், குறுஞ்செய்திகள் (SMS) மூலம் வாக்களிக்கும் பார்வையாளர்களும் சேர்ந்து சிலரை தெரிவுசெய்கிறார்கள். பிறர் மேடையிலேயே விலக்கப்படுகிறார்கள். கடைசியில் ஒரு 'இசை நட்சத்திரம்' தெரிவு செய்யபப்ட்டு அவர் முதன்மையான பாடகராக முன்வைக்கப்படுகிறார். 2002 ல் அமெரிக்க

போனி எம் எனும் நிழற் பாட்டுக் குழு

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் என் மனைவி என்னிடம் ஒரு விளம்பர இசைத்துணுக்கு பற்றிச் சொன்னாள். ஹிந்தி சினிமாவின் பழைய கனவுக்கன்னி ஹேமமாலினி நடித்த அந்த நகைக்கடை விளம்பரத்தைத் தொலைக்காட்சியில் கேட்கும் போதெல்லாம் அப்போது இரண்டுவயது தாண்டாத எங்களது மகள் கீதி சலிலா தன் சின்னஞ்சிறு கைகளை விரித்துத் தலையை ஆட்டி மகிழ்ச்சியால் எம்பிக்குதிப்பாளாம்! அவளுக்கு அந்த இசைமீது அப்படி ஒரு மோகம்! நான் அந்த இசைத்துணுக்கு எது என்று பார்த்தேன். 1977ல் வந்த போனி எம்மின் பிரபலமான பாடல் ‘இன்னும் சோகமாகவே இருக்கிறேன்’ (Still I am sad) அப்படியே தூக்கி வைத்திருந்தார்கள்! ‘ரா ரா ரஸ்புடின்’, ‘ரிவர்ஸ் ஆஃப் பாபிலோன்’, ‘ஒன் வே டிக்கெட்’, ‘டாடி கூல்’, ‘சன்னி சன்னி’, ‘மா பேகர்’, பெல்ஃபாஸ்ட், ‘பஹாமா மாமா’ போன்றவை நாமனைவரும் கேட்டிருக்கக்கூடிய போனி எம் பாடல்கள். எழுபதுகளில் டிஸ்கோ அலையில் அவை இந்தியாவெங்கும் பெரும் போதையாக இருந்தன. இன்றும் அவை பலரால் ஏக்கத்துடன் நினைவுகூரப்படுகின்றன. ஒலிநாடாக்கருவி வந்த புதிதில், வளைகுடாவாசிகள் மண்டிய கேரளத்தில் பல வீடுகளில் ஒரு ஒலிநாடாக்கருவி இருக்கும் என்பதையும் அதனருகே இருக்கும் ஒலி

இந்தியத் திரையிசையின் திருப்புமுனை : சலில் சௌதுரி

ஒரு மலையோரக் கேரளக் கிராமத்தில் பிறந்து, எந்தக் குடும்பப் பின்னணியும் இல்லாமல் வாழ்க்கையை எதிர்கொள்ள நேரிட்டவன் நான். தனிமையும் தாழ்வுணர்ச்சியும் தனிமையும் மனிதர்களைப் பற்றிய அவநம்பிக்கையும் என்னை வதைத்த காலம் உண்டு. எனக்குத் தன்னம்பிக்கையையும் தூண்டுதலையும் அளித்தவை சலில் சௌதரி இசையமைத்த மலையாளப் பாடல்கள் என்றால் அதை ஒருவர் சாதாரணமாக நம்ப முடியாததுதான். ஆனால் அது உண்மை. சலில்தாவின் இசை கேரளப் பண்பாட்டின் படைப்பு அல்ல, அது கண்டிப்பாகக் கேரள மண்ணுக்கு அன்னியமான இசை. நான் கேட்டு வளர்ந்த, என் காதுக்கும் மனதுக்கும் பழகிய, கேரள இசைக்கு முற்றிலும் மாறான ஒன்று. அதுதான் என்னைப் பொறுத்தவரை அதன் முதல் கவர்ச்சி. வானுயர்ந்த மலைகள் எல்லையிட்ட அந்த குக்கிராமங்களுக்கு வெளியே ஒரு பெரும் உலகம் விரிந்திருப்பதை அது என் ஆத்மாவுக்கு காட்டியது. அவ்வுலகில் பூக்களும் நீரோடைகளும் இருந்தன! இனிய மனிதர்கள் மட்டுமே இருந்தனர்! மனிதர்களின் அகம் இவ்வுலகெங்கும் ஒன்றுதான் என்றும், இசை மூலம் அங்கே நுழைய வாசல் இருக்கிறது என்றும் அவ்விசை எனக்குச் சொன்னது. இதெல்லாம் இப்போது நான் எண்ணிக் கொள்வனவாக இருக்கலாம். ஆனால் அன்று சல

பாப் மார்லி : கறுப்பின விடுதலைப் பாடகன்

பிரசாத் யுவநேசன் மலேசியத் தமிழ் இளைஞன். வருடங்களுக்கு முன்பு நான் அவனைச் சந்தித்தபோது சென்னையில் தங்கி சினிமாப் படத்தொகுப்பு கற்றுக் கொண்டிருந்தான். அவனுக்கு நீளமான கரிய தலைமுடிச் சுருள்கள், கிட்டத்தட்ட சடைத்திரிகள் மாதிரி. எப்போதும் மணிக்கட்டில் பச்சை மஞ்சள் சிவப்புப் பட்டைகளையும் விரல் பட்டைகளையும் கட்டியிருப்பான்.  கஞ்சா இலைகளின் படமோ, 'Could You Be Loved?', 'In Bob I Trust' போன்ற வரிகளோ அவன் சட்டைகளில் விரிந்திருக்கும். சட்டையில் சடைமுடி சிங்கப் பிடரி போல பறக்கும் பாப் மார்லியின் பெரிய படங்கள். முகத்தின் மீது சரிந்த சடைக்கற்றைகளுடன் கஞ்சா இழுக்கும் பாப் மார்லி... தியான பாவத்துடன் கித்தாரின் மீது விரல் வைத்து அமர்ந்திருக்கும் பாப் மார்லி... பிரசாத்தை ஒரு பாப் மார்லி ரசிகன் என்று சொல்வது சரியல்ல... அவன் பாப் மார்லி என்ற கடவுளின் பக்தன். என்னிடம் அவன் சொல்வதுண்டு, “சார், எனக்கு அவன் இருக்கான் சார், பாப் மார்லி. எல்லாம் அவன் பாத்துக்குவான். அவன் காப்பாத்துவான்...” பிரசாத்தின் கண்கள் ஒளிவிடும். ‘‘தினமும் அவன் பாட்டைக் கேளுங்க... அவன்கிட்ட பிரார்த்தனை பண்ணுங்க... அவன் ந