முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பின்னணிப் பாடகனின் மரணம்

ஒவ்யூர் அருங்கா பதினேழாவது வயதில் தனது வீட்டின் சுவரை அடித்து உடைத்தார்! வீட்டின் முக்கியமான தாங்குச் சுவர். வீடே கிட்டத்தட்ட சரிந்தது. தாய் தந்தையினர் திரும்பிவந்தபோது நிலநடுக்கத்தில் சிக்கியதுபோல் அந்த வீடு காட்சியளித்தது. என்ன நடந்தது என்ற கேள்விக்கு தனது ட்ரம்பெட்டின்   (Trumpet)  ஒலி அந்தச்   சுவரில் இடித்து எதிரொலித்து முழங்கி இசையை தெளிவற்றதும் நாராசமானதும் ஆக்குவதால்   வேறு வழியில்லாமல் உடைத்தேன் என்றுச்   சாதாரணமாகச் சொன்னார்! வீட்டைச் சரிசெய்து அதில் முறையான ஒலி தடுப்பான்கள் அமைத்த ஒரு அறையை கட்டிக்கொடுக்கும் கட்டாயத்திற்கு ஆளாகினார்கள் ஒவ்யூரின் தாய் தந்தையினர். ஒவ்யூர் அருங்கா   இன்று கென்யாவின் மிக முக்கியமான, உலகப்புகழ் பெற்ற ட்ரம்பெட் கருவியிசைக் கலைஞர். இசைக்கும் தொழில்நுட்பத்திற்கும் சம்பந்தமேயில்லை என்கிறார்கள் சில இசை நிபுணர்கள். இசை வியாபாரத்திற்கு தொழில்நுட்பம் தேவை ஆனால் இசைக்கு அது அறவே தேவையில்லை என்கிறார்கள். இந்தக் கருத்து சரியா, என்ன? ஒரு இசைக்கலைஞன் இசைக்கும் இசையின் தரம் ஒன்றுதான் என்றாலும் அதன் தொனியும் தரமும் அந்த இசை ஒலிக்கும் இடத்திற்கு தகுந்ததுபோல் ம

இங்கல்பெர்ட் ஹம்பெர்டின்க் : சென்னையில் பிறந்த சர்வதேச இசை நட்சத்திரம்

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஊரடங்குச் சட்டமும் (Curfew) அதோடு மதுவிலக்கும்தான் ஹைதராபாத் நகரின் சிக்கலான சமூகப் பிரச்சினைகளாக இருந்தன! அப்போது நான் அங்கே ஒரு மேற்கத்திய இசைக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். அக்குழுவின் பெயர் ‘கர்ஃப்யூ!'. திடீரென்று எங்கும் மது இல்லாமலாயிற்று. ஆகவே களியாட்டங்கள் இல்லை, விளைவாக மேலையிசைக்கும் வாய்ப்புகள் இல்லாமலாயின. எங்கள் குழு அனேகமாக கலைந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் கடுமையாக உழைத்து ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை இசைமயமாக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அதிக நாளில்லை. சிதறிப்போன இசைக்கலைஞர்களைத் திரட்டி மீண்டும் இசைக்குழுவை ஒருங்கிணைக்க வேண்டும். ஒருவழியாக எல்லோரும் சிக்கினார்கள். முக்கியப் பாடகர் மாரியோவைத் தவிர. அவன் இல்லாவிட்டால் இசைக்குழுவே இல்லை! ஆள் எங்கே போனாரென்று எந்தத் தகவலும் இல்லை. சிலர் சொன்னார்கள், மது கிடைக்காமல் அவன் மாநிலத்தைவிட்டே சென்றிருக்கக்கூடும் என்று. கடுமையான தேடலுக்குப் பின் அவன் கர்நாடக மாநிலத்தில் பிதர் என்ற ஊரில் இருப்பதாகத் தெரியவந்தது. அங்கே ஒரு ஆங்கிலப் பள்ளியில் இசை ஆசிரியராக வேலைபார்த்தான்

மன்னா டே : ஒரு சகாப்தத்தின் இறுதி நட்சத்திரம்

மன்னா டேவைப் பாராட்டும் பொருட்டு திருவனந்தபுரத்தில் ஒரு இசைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வருடத்தின் ஜேசுதாஸ் விருது அவருக்கு அளிக்கப்பட்டதை ஒட்டி அது நடந்தது. அதில் மன்னா டே அவரது புகழ்பெற்ற சில ஹிந்தித் திரைப்பட பாடல்களைப் பாடத் தொடங்கினார். அவற்றில் பல அங்கிருந்தவர்கள் அதிகம் அறிந்திராத பாடல்கள். சில பாடல்கள் தாண்டியதும் அமைதியிழந்த கூட்டம் கூச்சலிட ஆரம்பித்தது. பாடுவதை நிறுத்தி, நல்ல பாடல்களை ரசிக்கும் திறனோ பாடகர்களை மதிக்கும் பண்போ இல்லாதவர்கள் என்று அவர்களை நோக்கிச் சீறிவிட்டு மன்னா டே கடும் சினத்துடன் அரங்கிலிருந்து இறங்கிச் சென்றார். அவர் விருதையும் ஏற்றுக்கொள்ளவில்லை பின்னர் ஒருமுறை கேரள அரசு ஏற்பாடு செய்திருந்த ஒரு இசை நிகழ்ச்சியில் அவருடைய சில ஹிந்திப் பாடல்களுக்குப் பின்னணி இசையை உரிய முறையில் அமைக்க இசைக்கலைஞர்கள் திணறியபோது, சென்ற காலத்தின் மகத்தான அப்பாடல்கள் மீது அவர்கள் காட்டிய உதாசீனத்தை மேடையிலேயே கடுமையாகக் கண்டித்தார் மன்னா டே. மன்னா டே இந்தியா கண்ட மாபெரும் பாடகர்களில் ஒருவர். உணர்ச்சிக் கொந்தளிப்பு மிக்க இசைமேதை. நாடளாவிய புகழ் பெற்ற அக்கால பெரும் திரைப